பாசத்துடன் வெளியான 'மருதாணி': 'அண்ணாத்த' மூன்றாவது பாடல் வெளியீடு - அண்ணாத்த பட பாடல்கள்
ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'அண்ணாத்த' படத்திலிருந்து மூன்றவாது பாடலான மருதாணி பாடல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் படம் 'அண்ணாத்த'. 'சிறுத்தை' சிவா இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'அண்ணாத்த' திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4ஆம் தேதி வெளியாகிறது.
-
#Marudhaani: #AnnaattheThirdSingle is here!
— Sun Pictures (@sunpictures) October 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶ https://t.co/h87za3lRPP@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @AzizNakash @anthonydaasan @vandanism #ManiAmuthavan @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
">#Marudhaani: #AnnaattheThirdSingle is here!
— Sun Pictures (@sunpictures) October 18, 2021
▶ https://t.co/h87za3lRPP@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @AzizNakash @anthonydaasan @vandanism #ManiAmuthavan @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals#Marudhaani: #AnnaattheThirdSingle is here!
— Sun Pictures (@sunpictures) October 18, 2021
▶ https://t.co/h87za3lRPP@rajinikanth @directorsiva #Nayanthara @KeerthyOfficial @immancomposer @AzizNakash @anthonydaasan @vandanism #ManiAmuthavan @khushsundar #Meena @sooriofficial @AntonyLRuben @dhilipaction @vetrivisuals
'அண்ணாத்த' படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று (அக்.18) இப்படத்தின் மூன்றாவது பாடலான 'மருதாணி' என்னும் பாடல் வெளியாகியுள்ளது.
அண்ணன் - தங்கை பாசத்தை கருவாக கொண்டுள்ள இப்பாடல் கீர்த்தி சுரேஷை மையமாக கொண்டுள்ளது. கிராமத்துப் பின்னணியில் குடும்பக் கதையுடன் அதிரடியாக இருக்கும் 'அண்ணாத்த' படத்திற்குத் தணிக்கைக் குழு யூ/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.