சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’சந்திரமுகி’. பி.வாசு இயக்கிய இத்திரைப்படத்தில் ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். திகில் கலந்த த்ரில்லர் பாணியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருவதாக அடிக்கடி கிசுகிசுக்கப்பட்டது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது ’சந்திரமுகி 2’ திரைப்படம் உருவாகிவருவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், ''நண்பர்களே நான் ஒரு முக்கியமான அறிவிப்பை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். எனது அடுத்த படம் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். தலைவரின் அனுமதியுடனும், ஆசீர்வாதங்களுடனும் இந்த படத்தில் நடிக்கவுள்ளேன். பி.வாசு இயக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: ரூ.3 கோடி நிதியுதவி வழங்கிய ராகவா லாரன்ஸ்