'அலா வைகுந்தபுரமுலோ' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'புஷ்பா'. 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் உருவாகிவரும் இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
கரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. புஷ்பா படத்தில் பன்வார் சிங் ஷெகாவத் (ஐபிஎஸ்) கதாபாத்திரத்தில் மொட்டைத் தலையுடன் ஆக்ரோஷமாக ஃபகத் பாசில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில், ராஷ்மிகா கதாபாத்திரத்தை குறிக்கும் வகையில், ஸ்ரீவள்ளி பாடல் வெளியாகியுள்ளது. சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
-
Here it is! #Srivalli song out now.https://t.co/18sOcRxCV8#PushpaTheRise@iamRashmika @aryasukku @ThisIsDSP @sidsriram @boselyricist @AlwaysJani @shobimaster @adityamusic @MythriOfficial
— Allu Arjun (@alluarjun) October 13, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here it is! #Srivalli song out now.https://t.co/18sOcRxCV8#PushpaTheRise@iamRashmika @aryasukku @ThisIsDSP @sidsriram @boselyricist @AlwaysJani @shobimaster @adityamusic @MythriOfficial
— Allu Arjun (@alluarjun) October 13, 2021Here it is! #Srivalli song out now.https://t.co/18sOcRxCV8#PushpaTheRise@iamRashmika @aryasukku @ThisIsDSP @sidsriram @boselyricist @AlwaysJani @shobimaster @adityamusic @MythriOfficial
— Allu Arjun (@alluarjun) October 13, 2021
முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான, 'ஓடு ஓடு ஆடு' பாடல் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியில் ’அலா வைகுந்தபுரமுலோ’: படப்பிடிப்பு தொடக்கம்