ETV Bharat / sitara

முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் சங்கம்

திரையரங்குகள் செயல்பட அனுமதி வழங்கிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

author img

By

Published : Aug 24, 2021, 2:16 PM IST

தயாரிப்பாளர்கள் சங்கம்
தயாரிப்பாளர்கள் சங்கம்

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதற்கு நன்றி தெரிவித்தும், கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "கரோனா பேரிடர் காலங்களில் திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வலிகளையும், வேதனையையும் உணர்ந்து திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

அதே நேரத்தில் திரைத்துறையில் பல ஆண்டுகளாக LBTயை (Local Body Tax) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். கடந்த அரசு இதுகுறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

முதலமைச்சர் எங்களது கோரிக்கையின் மீது நடவடிக்கை மேற்கொண்டு வரியை முழுமையாக ரத்து செய்து திரைத்துறையினருக்கு மறுவாழ்வு அளித்து உதவிட வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.