ETV Bharat / sitara

'கருத்துகளை பதிவு செய்' படத்தை வியந்து பாராட்டிய தணிக்கைக் குழு

சென்னை: சமூகவலைதளங்களில் உருவாகும் பொய்யான காதலை பற்றி எடுக்கப்பட்டுள்ள "கருத்துகளை பதிவு செய்" படத்தை பார்த்த தணிக்கைக் குழு அலுவலர்கள் வியந்து பாராட்டியுள்ளனர்.

upashna roi
author img

By

Published : Oct 19, 2019, 7:56 PM IST

ஜித்தன் 2 படத்தின் இயக்குநர் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருத்துகளை பதிவு செய்'. இப்படத்தில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆர் பேரன் ஆர்யன் கதாநாயகனாக நடிக்கிறார். ஆர்பிம் சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் உபாஷ்ணா ராய் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இப்படம் தணிக்கை சான்றிதழ் பெற தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த தணிக்கை குழு, இயக்குநரின் திறமையை பாராட்டி மகிழ்ந்துள்ளது. இம் மாதிரியான படங்கள் இந்தக்கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி வாழ்த்து கூறியுள்ளனராம்.

கருத்துகளை பதிவு செய் நாயகி உபாஷ்ணா ராய்

'கருத்துகளை பதிவு செய்' திரைப்படம், சமூகவலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் மையமாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இந்த சிக்கலில் மாட்டிக்கொள்ளும் ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார். அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதை சுவாரசியத்துடன் ரசிகர்கள் வியக்கும் வகையில் சொல்ல முயற்சித்திருக்கிறேன் என்று படத்தின் இயக்குநர் பரமகம்சா தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ராஜசேகர் எழுதியுள்ளார். கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு கணேஷ்.டி படத்தொகுப்பு செய்துள்ளார். மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மிரட்டல் விடுக்கும் நாயகி
மிரட்டல் விடுக்கும் நாயகி

பெண்களின் மீது சுமத்தப்படும் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க "கருத்துகளை பதிவு செய்" நவம்பர் மாதம் வெளியாகிறது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Intro:சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய "கருத்துகளை பதிவு செய் “

Body:SSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள "கருத்துகளை பதிவு செய்" படம் சென்சாருக்காக அனுப்பப்பட்டது. சமூக வலைதளங்களில் உருவாகும் பொய்யான காதல் பற்றியும், அதன் மூலம் பெண்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதே கதை, அப்படி மாட்டிக்கொண்ட ஒரு அப்பாவி பெண் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார், அந்த நயவஞ்சக கும்பல்களை என்ன செய்கிறார், என்பதே இந்த "கருத்துகளை பதிவு செய்" திரைப்படம். படத்தை பார்த்த சென்சார் போர்டு தலைமை அதிகாரி இம் மாதிரியான படங்கள் இந்த கால தலைமுறைக்கு அவசியம் என்று சொல்லி பாராட்டி எனக்கு வாழ்த்தி கூறினார் என படத்தின் இயக்குனர் ராகுல் பரமகம்சா தெரிவித்துள்ளார்.

இப்படத்திற்கு U/A சான்றிதழும் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தின் சமூக வலைதளங்களில் மூலம் உருவாகும் முக்கிய பிரச்சனையை மையமாக வரும் இப்படத்தின் இணை தயாரிப்பு JSK கோபி.

தயாரிப்பு – RPM சினிமாஸ்

கதை, திரைக்கதை, வசனம் - ராஜசேகர்

இசை: கணேஷ் ராகவேந்திரா,

பின்னணி இசை: பரணி,

பாடல்கள் - சொற்கோ

எடிட்டர்: கணேஷ்.D

ஒளிப்பதிவாளர்: மனோகரன்

Conclusion:இவர்களின் கூட்டணியில் உருவான "கருத்துகளை பதிவு செய்" திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகிறது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.