தமிழ் சினிமாவில் 90’ஸ் காலக்கட்டத்தில் டாப் ஹீரோவாக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான 'ஜீன்ஸ்' திரைப்படம் இன்றும் ரசிகர்கள் மனதிற்கு நெருக்கமான படமாக உள்ளது. காரணம் அந்த அளவிற்கு அவரது நடிப்பு அதில் பேசப்பட்டது. இதையடுத்து பிரசாந்த் நடிப்பில் வெளியான படங்கள் சரியாக கைகொடுக்காததால் பட வாய்ப்புகள் குறைந்தன.
இந்நிலையில், தற்போது ஹிந்தியில் வெளியான 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த் நடித்து வருகிறார். இதுதவிர சமந்தா நடிக்கும் புதிய படத்திலும் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்.. ’மாயா’, ’கேம் ஓவர்’ பட இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கும் படத்தில் பிரசாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
பெண்ணை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. மேலும் அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திரைத்துறை குறைகளைக் களைய சிறப்புக் குழு அமைப்பு!