'பொன்னியின் செல்வன் பாகம்-1' திரைப்படம், 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எழுத்தாளர் கல்கியின் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இத்திரைப்படத்தை, இந்தியாவின் மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கி வருகிறார்.
லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது. இதில் முதல் பாகமான பொன்னியின் செல்வன் - 1, 2022 செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சோழப்பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை 'பொன்னியின் செல்வன்'. இது அனைவரும் அறிந்ததே.
இதைத் திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். சோழப் பேரரசின் பொற்காலம் தொடங்கும் இந்தக்கால கட்டத்தைத் திரைக்குக்கொண்டு வர ஆயிரக்கணக்கான கலைஞர்கள் உழைத்து வருகின்றனர். இதன் முதல் பாகம் வெளியாவதை காண உலகமே காத்துக்கொண்டு இருக்கிறது என்பதே உண்மை.
இதையும் படிங்க:'ஜெய் பீம்' நல்ல எண்ணத்தில் தான் எடுத்தோம் - நடிகர் சூர்யா