ETV Bharat / sitara

Me Too புகார் - மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்படும் அர்ஜுன் - அர்ஜுன் மீது பாலியல் வழக்கு

நடிகர் அர்ஜூன் மீது நடிகை கொடுத்த பாலியல் புகாரில், போதிய ஆதாரமில்லாத காரணத்தால் அவர் குற்றமற்றவர் என காவல்துறை தெரிவித்துள்ளது.

அர்ஜுன்
அர்ஜுன்
author img

By

Published : Dec 1, 2021, 12:22 PM IST

'நெருங்கி வா முத்தமிடாதே', 'சோலோ', 'நிபுணன்' உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ருதி ஹரிஹரன். இவர் நிபுணன் படத்தில் நடிகர் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தின் படப்பிடிப்புபோது அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்ருதி ஹரிஹரன் 2018ஆம் ஆண்டு பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த அர்ஜுன், தன் மீது வேண்டுமென்ற ஸ்ருதி ஹரிஹரன் பாலியல் புகார் கொடுத்துள்ளார் என்றார்.

இந்த வழக்கு தொடர்பாக காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகளாக ஸ்ருதி ஹரிஹரன் தரப்பு, அர்ஜுனுக்கு எதிராக எந்த ஆதாரமும் சமர்ப்பிக்காத காரணத்தினால் அவர் குற்றமற்றவர் என கப்பன் பார்க் காவலர்கள், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யதுள்ளனர். இதையடுத்து அர்ஜுன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அசத்தலான ஸ்டைலிஷ் உடையால் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்த பிரியங்கா - நிக் ஜோடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.