விஜய் நடித்துள்ள, ‘மாஸ்டர்’ படம் பல மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகளில் இன்று(ஜன.13) வெளியானது. இதனால் சென்னையில் உள்ள திரையரங்குகளில் கரோனா விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பதை காவல் துறையினர் கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வரும் காசி திரையரங்கம், கோயம்பேட்டில் உள்ள ரோகிணி, ஆல்பர்ட் உள்ளிட்ட 10 இடங்களில் இருக்கும் திரையரங்குகள் கரோனா விதிமுறைகளை மீறி, 50 சதவிகிதத்திற்கும் அதிகமான ரசிகர்களை அனுமதித்ததுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் திரையரங்கிற்கு வரக்கூடிய ரசிகர்களில் பலரும் முகக்கவசம் அணியாமல் படத்திற்குச் சென்றுள்ளனர். இதனால் சென்னை முழுவதும் 11 வழக்குகளை காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தொற்று நோய் பரவல் சட்டம் மற்றும் சட்டவிரோத கூடுதல் என இரு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.