ETV Bharat / sitara

ஆஸ்கர் விழாவில் விருதைப் பத்திரமாக ஒளித்துவைத்த இயக்குநர் - விருதை பத்திரப்படுத்தும் டைக்கா வெய்டிட்டி

ஜோஜோ ரேபிட் திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருது வென்ற இயக்குநர் டைக்கா வெய்டிட்டி, தான் வாங்கிய விருதினை முன் இருக்கையின் அடியில் பத்திரப்படுத்தி வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

விருதை பத்திரப்படுத்தும் டைக்கா வெய்டிட்டி

author img

By

Published : Feb 11, 2020, 7:53 AM IST

ஜோஜோ ரேபிட் திரைப்படத்திற்காக சிறந்த தழுவப்பட்ட திரைக்கதைக்கான பிரிவில் இயக்குநர் டைக்கா வெய்டிட்டி ஆஸ்கர் விருதினை வென்றார்.

அதைத்தொடர்ந்து தான் வென்ற விருதினை தனக்கு முன்னே இருந்த இருக்கையின் அடியில் வெய்டிட்டி பத்திரப்படுத்தி வைக்கும் காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

வெய்டிட்டி ஆஸ்கர் வாங்கிய தருணங்களைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது இந்தத் தருணங்களையும் சேர்த்து நடிகை ப்ரீ லார்சன் பதிவுசெய்துள்ளார். தன் இன்ஸ்டா பக்கத்தில் வெய்டிட்டியை டேக் செய்து இந்தக் காணொலியைப் பகிர்ந்துள்ள லார்சன், தான் படம் பிடிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அறியாமல் வெய்டிட்டி இதைச் செய்துள்ளார் எனவும் குறும்பாகப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து, ”இந்த மனிதர், ஹாலிவுட்டில் எனக்கு மிகவும் பிடித்த நபராக மாறிவிட்டார்” என்றும் ”எவரும் இருக்கையின் அடியில் பார்க்கமாட்டார்கள்; அருமையான இடம்” என்றும் ரசிகர்கள் இணையத்தில் வெய்டிட்டியை கிண்டல் செய்தும் ரசித்தும் கருத்துக்களைப் பகிர்ந்துவருகின்றனர்.

இதையும் படிங்க: ஆஸ்கர் மேடையில் அநீதிக்கெதிராகக் குரல் எழுப்பிய ‘ஜோக்கர்’ நாயகன்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.