ETV Bharat / sitara

'ஆஸ்கர்' வென்ற நடிகை கைது - கை விலங்குடன் அழைத்துச் சென்ற காவல்துறை! - ஆஸ்கர் வென்ற நடிகை கைது

வாஷிங்டன்: பருவநிலை மாற்றுத்துக்கு எதிராகப் போராடிய ஆஸ்கர் விருது பெற்ற நடிகையை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரையும் போராட்டகாரர்களையும் கைவிலங்குடன் காவல்துறை வாகனத்தில் ஏற்றும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் வெற்றியாளர் ஜேன்  ஃபோண்டா வாஷிங்டனில் கைது
author img

By

Published : Oct 12, 2019, 9:23 PM IST

81 வயதாகும் ஆஸ்கர் வெற்றியாளர் ஜேன் ஃபோன்டா வாஷிங்டனில் அமைதியான முறையில் பருவநிலை மாற்றத்துக்க எதிராகப் போராடியபோது கைது செய்யப்பட்டார்.

இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட 16க்கும் மேற்பட்டோரை அமெரிக்க காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கூட்டமாகக் கூடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி, நடிகை ஜேன் ஃபோன்டா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவரைக் கை விலங்குடன் காவல்துறை அழைத்துச் செல்லும் வீடியோ வைரலாகியுள்ளது.

'ஃபயர் ட்ரீல் ஃபிரைடே' என்ற பிரசாரத்தில், தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஃபோன்டா, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை தோறும், பருவநிலை மாற்றத்துக்கு எதிராகத் தலைவர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதுடன், போாராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

'ஆஸ்கர்' வென்ற நடிகை கைது - கைவிலங்குடன் அழைத்துச் சென்ற காவல்துறை

இதுகுறித்து அவர் கூறியதாவது, 'இளைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த பிரசாரத்தில் வெள்ளிக்கிழமைதோறும் தவறாமல் கலந்துகொள்கிறேன். நாம் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் லாப நோக்கில் பல்வேறு தொழிற்சாலைகளை வளர்த்து பூமியை அழித்து வருகின்றனர்' என்று கூறினார்.

இதையும் படிங்க:

ஹீ இஸ் தி பிரைட் ஆஃப் நேஷன் - பிகிலின் வெறித்தன ஆட்டம்!

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/culture/oscar-winning-actor-jane-fonda-arrested-protesting-climate-change/na20191012144554408

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.