ஒரே பாடலில் உலகம் முழுவதும் பிரபலமான, நடிகை பிரியா வாரியர் நடித்துள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. மலையாளத்தில் உருவான ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மாணிக்ய மலராய பூவி’ பாடல் மூலம் ஒரே இரவில் சமூக வலைத்தள பிரபலமானாவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்.
இவர் புருவத்தை அசைத்து கண்ணடிப்பதும், துப்பாக்கிச் சுடுவது போல் முத்தம் கொடுப்பதும் அடங்கிய காட்சி ஒன்று இணையத்தில் வைரலானது. இந்த காட்சி ஓமர் லுலு இயக்கியுள்ள ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. பிரியா வாரியர், ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்த இத்திரைப்படம் வரும் காதலர் தினத்தன்று ரிலீசாகவுள்ளது.
மலையாளம் மட்டுமின்றி இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், தமிழில் வெளியாகும் இப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தை தமிழில் ‘வி’ கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு வழங்குகிறார். காதலர் தின ட்ரீட்டாக வெளியாகவுள்ள இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.