ETV Bharat / state

சிங்கப்பூருக்கு புறப்பட்ட பயணிகள் விமானம் நடுவானில் கோளாறு.. சென்னையில் தரையிறக்கம்! - AIR INDIA FLIGHT EMERGENCY LANDING

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட திடீர் இயந்திரக் கோளாறு காரணமாக விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானம் கோப்புப்படம்
விமானம் கோப்புப்படம் (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2025, 8:36 PM IST

சென்னை: சென்னையில் இருந்து 159 பயணிகளுடன் அதிகாலை சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானம், திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டுள்ளது. பின்னர், கோளாறு சரிசெய்யப்பட்டு, 7 மணி நேர தாமதத்திற்குப் பிறகு விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளது.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று (ஜனவரி10) வெள்ளிக்கிழமை நள்ளிரவு 12.45 மணிக்கு, 159 பயணிகள் மற்றும் 8 விமான ஊழியர்கள் என மொத்தம் 167 பேருடன் புறப்பட தயார் நிலையில் இருந்துள்ளது. ஆனால், திடீரென விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, தாமதமாக அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது.

இந்நிலையில், விமானம் நடுவானில் பறந்துக் கொண்டிருந்தபோது, மீண்டும் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, விமானம் வானில் பறந்தால் ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை சென்னையில் மீண்டும் திருப்பிக் தரையிறக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:தூத்துக்குடி - மதுரை ரயில் திட்டம்: வேண்டாம் என்று சொன்னதே தமிழ்நாடு அரசு தான்!

இதையடுத்து, விமானம் இன்று அதிகாலை 4.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு, விமான பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுதுபார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில், விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை.

பின்னர், ஏர் இந்தியா நிறுவனம் மாற்று விமானம் ஏற்பாடு செய்து, பயணிகள் அனைவரையும் ஏற்றிக்கொண்டு சுமார் 7 மணி நேரம் தாமதமாக இன்று காலை 7.30 மணிக்கு மீண்டும் சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.