தமிழில் ’நெடுஞ்சாலை’, ’எங்கேயும் எப்போதும்’, ’காஞ்சனா 2’, ’இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் சத்யா.
இவர் தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று குறித்து, விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
'விழுத்திரு தனித்திரு, வரும் நலனுக்காக நீ தனித்திரு'என்று தொடங்கும் இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது, இன்சமாம் எழுதியுள்ள இப்பாடலுக்கு பின்னணி பாடகர்கள் சத்யபிரகாஷ், சத்யன் மகாலிங்கம், கனடாவை சேர்ந்த அபி, அமெரிக்காவை சேர்ந்த சுதர்சனன் அசோக், கணேசன் மனோகரன், இன்சமாம் ஆகியோருடன் இசையமைப்பாளர் சத்யாவும் இணைந்து பாடியுள்ளார்.
இதுகுறித்து சத்யா பேசுகையில், “கரோனா வைரஸ் தொற்று குறித்து இசையமைப்பாளராக என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அறிவியல் வளர்ச்சியடைந்துள்ளதால் இதில் பாடியவர்கள், பாடல் எழுதியவர்கள் என்று அனைவரும் ஆன்லைன் மூலம் பாடியும், எழுதியும் கொடுத்தார்கள். தொடர்ந்து சில ஆல்பங்களை வெளியிடவுள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: ’சீனாக்காரன் சாப்பிட்டதற்கு நாங்க கைய கழுவணுமா’- இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் விழிப்புணர்வு பாடல்