மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்தப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படம் மோகன்லாலின் திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
அதுமட்டுமல்லாது இந்தத் திரைப்படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்ட முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மோகன்லாலை வைத்து 'ராம்' என்னும் புதிய படத்தை ஜீத்து ஜோசப் இயக்கி வருகிறார். இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இப்படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. கேரளாவில் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை ஏறக்குறைய படக்குழு முடித்துவிட்டது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாடுகளில் எடுப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கரோனா தொற்று காரணமாகப் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் சரியான பிறகே 'ராம்' படத்தின் மீதி படப்பிடிப்பு தொடங்கப்படும் என்பதால் அதற்குள் 'த்ரிஷ்யம் 2' படத்தை இயக்கும் முயற்சியில் ஜீத்து ஜோசப் இறங்கியுள்ளார்.
'த்ரிஷ்யம்' படத்தின் தொடர்ச்சியாகவும் முதல் பாகத்தில், ஜார்ஜ் குட்டியின் (மோகன்லால்) குடும்பமான மீனா, எஸ்தர் உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர்.
'த்ரிஷ்யம்' முதல் பாகம் எடுக்கப்பட்ட தொடுபுழாவில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 5) மோகன்லால் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜார்ஜ் குட்டியின் குடும்பம் என பதிவிட்டு, மீனா, எஸ்தர், ஜீத்து ஜோசப் உள்ளிட்டோருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மீண்டும் குடும்பத்தினருடன் ஜார்ஜ் குட்டி: 'த்ரிஷ்யம் 2' புகைப்படம் வைரல் - த்ரிஷ்யம் 2 அப்டேட்
'த்ரிஷ்யம் 2' படப்பிடிப்பில் மோகன்லால், மீனா கலந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.