'மைன் (Mine)' குறும்பட வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த விழாவில் பிஆர்ஓ யூனியன் செயலாளர் துளசி பழனிவேல், குறும்படத்தின் இயக்குநரும் நடிகருமான விமலேஷ் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
படம் குறித்து விமலேஷ் சேகர் கூறுகையில், 'மைன் (Mine)' சங்கரன் கோவிலில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில், ஆணவக் கொலைகள் குறித்து பேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.
ஏழு பேர் கொண்ட இளைஞர்கள் குழுவின் எட்டு மாத கடின உழைப்பின் பலனாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்தில் பெண்களின் சமத்துவம், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற அவலங்களையும் எடுத்துச் சொல்லியிருப்பதாகவும் கூறினார்.
ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடிய இப்படம் முழுக்கமுழுக்க சமூக கருத்துக்களை கூறும் படமாக தயாரித்து உள்ளோம் என்றும் விமலேஷ் தெரிவித்திருக்கிறார்.
விமலேஷ் சேகர் ஏற்கனவே 'விதை தமிழா' போன்ற சமூக கருத்துக்களை கூறும் குறும்படங்களை இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.