ETV Bharat / sitara

பாண்டேவிடம் அஜித் இட்ட அன்புக் கட்டளை!

சினிமாவிற்கு சமூகப் பொறுப்பு அதிகம் உள்ளது. சினிமா தற்போது அரசியல்போல் மாறிவிட்டது என்று வருத்தம் தெரிவித்த மூத்த ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே நடிகர் அஜித் தன்னிடம் சொன்ன விஷயத்தையும் பகிர்ந்துகொண்டார்.

மீண்டும்
மீண்டும்
author img

By

Published : Dec 18, 2021, 9:21 AM IST

சிட்டிசன் பட இயக்குநர் ஷரவணன் சுப்பையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மீண்டும்'. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று (டிசம்பர் 17) சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர், ரவிமரியா, பேரரசு, பி.டி. செல்வகுமார், திண்டுக்கல் லியோனி, நாஞ்சில் சம்பத், ரவிமரியா, ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பேரரசு, "தமிழ் சினிமாவில் 500-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. அரசியல் கட்சிகளைப் போலவே தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும் பிரிந்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து திரையுலகின் நன்மைக்கு உதவ வேண்டும்" என்றார்.

மீண்டும் படக்குழு
மீண்டும் படக்குழு

பின்னர் பேசிய ரங்கராஜ் பாண்டே, "சினிமாவிற்கு சமூகப் பொறுப்பு அதிகம் உள்ளது. சினிமா தற்போது அரசியல்போல் மாறிவிட்டது. தமிழ் சினிமா ஏராளமானவர்களின் உழைப்பால் உருவாகுவது என்று அனைவரிடமும் சென்று சொல்லுங்கள் என நடிகர் அஜித் படப்பிடிப்பில் என்னிடம் ஒருமுறை சொன்னார். மீண்டும் திரைப்படத்தை மக்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பேச்சிலர் அனைவருக்குமான வெற்றி - ஜி.வி. பிரகாஷ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.