பத்மகுமார் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து உருவாகி வரும் வராலாற்றுத் திரைப்படம் 'மாமாங்கம்'. இதில் பிரஜி தேசாய், மாளவிகா மேனன், உன்னி முகந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை காவ்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
-
#Mamangam Trailer (Tamil) ☺️✌🏼
— Unni Mukundan (@Iamunnimukundan) November 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
https://t.co/Lael4PbeRq @mammukka @Prachi_Tehlan @i_anusithara
">#Mamangam Trailer (Tamil) ☺️✌🏼
— Unni Mukundan (@Iamunnimukundan) November 8, 2019
https://t.co/Lael4PbeRq @mammukka @Prachi_Tehlan @i_anusithara#Mamangam Trailer (Tamil) ☺️✌🏼
— Unni Mukundan (@Iamunnimukundan) November 8, 2019
https://t.co/Lael4PbeRq @mammukka @Prachi_Tehlan @i_anusithara
கேரளாவிலுள்ள மலபார் பகுதியில் கொண்டாடப்படும் 'மாமாங்கம்' என்ற திருவிழாவை அடிப்படையாகக் கொண்டு, இப்படம் உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 18ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் நடப்பதுபோன்று எடுக்கப்பட்ட இப்படம், வரும் நவம்பர் 21ஆம் தேதி மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ் பதிப்பில் மம்மூட்டியே சொந்தமாகக் குரல் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.