ETV Bharat / sitara

’தளபதி’க்கு கை கொடுத்த தெலுங்கு பிரின்ஸ்... ஹேப்பி பர்த்டே மகேஷ்பாபு

தமிழ் ’தளபதி’ விஜய் சோர்ந்துபோன நேரத்தில் 'கில்லி' 'போக்கிரி'யாக அவர் தன்னை நிலைநிறுத்திக் கொண்டதற்கு பின்னால் ’தெலுங்கு பிரின்ஸ்’ மகேஷ்பாபு இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

maheshbabu
author img

By

Published : Aug 9, 2019, 8:45 PM IST

தெலுங்கு திரையுலகில் முக்கிய நடிகர்களின் பட்டியலில் நடிகர் கிருஷ்ணாவின் பெயர் முக்கியமான ஒன்று. 1960களில் நடிகராக அறிமுகமானவர் சிவராம கிருஷ்ணா கட்டமனேனி. இவர் நடித்த சில படங்களிலேயே ரசிகர்களுக்கு கிருஷ்ணாவை பிடித்துவிட்டது. அப்போது பெரிய நட்சத்திரங்களாக இருந்த என்.டி.ராமாராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஆகியோருடன் இணைந்தும் நடித்தார்.

மகேஷ் பாபு
கேசுவல் லுக்

நடிகராக தனது வாழ்க்கையை தொடங்கிய கிருஷ்ணா, தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் அளவிற்கு வளர்ந்தார். தனது 'பத்மாலயா நிறுவனம்' மூலம் பெரிய நடிகர்களை வைத்தும் படங்களை எடுக்க ஆரம்பித்தார். கிருஷ்ணாவுக்கு இரண்டு மகன்கள், மூன்று மகள்கள். இதில் ரமேஷ் பாபு, மகேஷ் பாபு, மஞ்சுளா ஆகியோர் சினிமாவுக்குள் நுழைந்தனர். முதலில் நடிக்க வந்த ரமேஷ் பாபுவுக்கு ரசிகர்களிடமிருந்து போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் தந்தையின் தயாரிப்பு நிறுவனத்தை அவர் கவனித்துக்கொண்டார்.

மகேஷ் பாபு
தந்தை கிருஷ்ணாவுடன் மகேஷ்பாபு

மஞ்சுளா மலையாள இயக்குநர் சிபி இயக்கிய 'சம்மர் இன் பெத்லகேம்' படத்தின் முலம் அறிமுகமானார். பின் 'ஷோ' என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தேசிய விருதும் வாங்கியது. மஞ்சுளா திரைப்படத் தயாரிப்பாளர், நடிகருமான சஞ்சய் ஸ்வரூப்பை திருமணம் செய்துகொண்டு சின்ன சின்ன கதாபாத்திரங்கள் பட தயாரிப்பு என தனது கவனத்தை செலுத்திவருகிறார்.

மகேஷ் பாபு
மேஜர் அஜய் கிருஷ்ணன்

கடைசியாக மகேஷ்பாபு சினிமாவில் என்ட்ரீ கொடுத்தார். அப்பா கிருஷ்ணா, அண்ணன் ரமேஷ் பாபு ஆகியோரின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், `ராஜகுமாருடு' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ’நந்தி’ விருது கிடைத்தது. பின் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த அவர், 'ஒக்கடு' படத்தில் நடித்தார். அப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த வெற்றி ஆந்திராவில் மகேஷ் பாபுவுக்கு ரசிகர் பட்டாளம் அமைக்க அடித்தளம் போட்டது. இவரது திரைவாழ்க்கையில் 'வம்சி' திரைப்படம் முக்கியமான ஒன்று. காரணம் 'வம்சி' படத்தில் மகேஷுக்கு ஜோடியாக நடித்த நர்மதாவைத்தான் அவர் திருமணம் செய்துகொண்டார்.

மகேஷ் பாபு
குடும்பத்தினருடன் மகேஷ்பாபு

மகேஷ்பாபுவின் திரைவாழ்க்கை கணிக்க முடியாத ஒன்று. காரணம் தெலுங்கில் வெளியான`போக்கிரி' மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்து வெளியான `சைனிகுடு', `அதிதி' படங்கள் தோல்வியடைந்தன. ’கலேஜா' படமும் சுமாரான வரவேற்பைப் பெற்றது. அடுத்த படமான`தூக்குடு' பெரிய ஹிட்டானது. இப்படி ஹிட், ஃப்ளாப் என ஏற்ற இறக்கங்களோடு அவரது கிராஃப் செல்லும். சில ஆண்டுகளுக்கு முன் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய `ஸ்பைடர்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் தெலுங்கில் `பரத் அனே நேனு' படம் தமிழில் 'பரத் என்னும் நான் ' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இத்தனை வருடங்களாக நடித்துக்கொண்டிருந்த மகேஷ்பாபு சமீபத்தில் வெளியான `மஹரிஷி' படத்தின் மூலம் தனது 25ஆவது படத்தை நிறைவுசெய்தார். இப்படம் மண்ணுக்கும் மனிதனுக்குமான இணைப்பைச் சொல்கிறது. விவசாயத்தை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது மஹரிஷியின் மையக்கரு.

மகேஷ் பாபு
'போக்கிரி' நடனம்

தமிழ் நடிகர் விஜய், நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த 'கில்லி' மகேஷ்பாபு நடிப்பில் வெளியான 'ஒக்கடு' படத்தின் ரீமேக். அதே போல் 2004 ஆண்டுக்கு பிறகு தமிழில் 'மதுர', 'திருப்பாச்சி', 'சிவகாசி' என ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருந்த விஜயை ஊருக்கே 'போக்கிரி'யாக அறிமுகம் செய்து அவருக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்ததும் மகேஷ் பாபுவின் 'போக்கிரி'தான்.

தமிழ் ’தளபதி’ விஜய் சோர்ந்துபோன நேரத்தில் 'கில்லி' 'போக்கிரி'யாக அவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டதற்கு பின்னால் ’தெலுங்கு பிரின்ஸ்’ மகேஷ்பாபு இருக்கிறார் என்பது மறுக்கமுடியாத உண்மை.

மகேஷ் பாபு
சிஇஓ 'மஹரிஷி'

'மஹரிஷி' படத்திற்கு பிறகு மகேஷ்பாபு அடுத்து நடித்து வரும் படம் 'சரிலேரு நீகேவரு'. இந்த படத்தை அனில் ரவிபுடி இயக்கிவருகிறார். இந்த படத்தில் மகேஷ் பாபு ராணுவ மேஜர் அஜய் கிருஷ்ணாவாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.