ETV Bharat / sitara

வெள்ளை தாடி, மீசைக்கு விடைகொடுத்த மாதவன்! - நம்பி நாராயணன்

இரண்டு வருடங்களாக தாடி, முடியுடன் சுற்றி வந்த நடிகர் மாதவன், தற்போது அதற்கு விடை கொடுத்து புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

madhavan
author img

By

Published : May 14, 2019, 10:13 PM IST

Updated : May 15, 2019, 7:32 AM IST

நடிகர் மாதவன் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துவருகிறார். அவரது தோற்றத்திற்கு மாறுவதற்காக நீண்ட காலமாக முடி, தாடியை வளர்த்துவந்தார்.

இந்த வாழ்கை வரலாற்றுப் படத்திற்காக, நடிகர் மாதவன் இரண்டு வருடங்களாக வெள்ளை தாடி, மீசையுடன் வலம்வந்து கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், வெள்ளை தாடி, மீசையை நீக்கிவிட்டு ரசிகர்கள் அன்போடு அழைக்கக் கூடிய மேடியாக மாறியுள்ளார் நடிகர் மாதவன்.

இது குறித்து மாதவன் தனது டிவிட்டர் பக்கத்தில் "இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் முகச்சவரம் செய்து கொண்டதாகவும், இளமையான விஞ்ஞானி நம்பி நாராயணன் ரெடியாகிவிட்டார்" எனவும் பதிவிட்டுள்ளார். இந்தத் திரைப்படம், பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பிறகுதான் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

madhavan ,மாதவன்
மாதவன் ட்வீட்

வெள்ளை தாடி மீசைக்கு குட்பை  இளமையாக மாறிய நடிகர் மாதவன்

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்பட்டு வருகிறது இந்த படத்தில் விஞ்ஞானி நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்து வருகிறார் . இந்த வாழ்க்கை வரலாற்று படத்திற்காக நடிகர் மாதவன் கடந்த இரண்டு வருடங்களாக வெள்ளை தாடி மீசையுடன் முழுமையான நம்பியாவே  விஞ்ஞானி கதாபாத்திரமாக மாறி அந்த படத்தையும் நடித்து முடித்து விட்டார்.  இந்நிலையில் 2 ஆண்டுகளாக வெள்ளைத் தாடி மீசையுடன் காணப்பட்ட கெட்டப்பை கலைத்துவிட்டு  ரசிகர்கள் அன்போடு அழைக்கும் இளமையான மேடியாமாறி உள்ளார் நடிகர் மாதவன். இதுகுறித்து நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்தப் பதிவில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் முகச்சவரம் செய்து  கொண்டதாகவும். இளமையான விஞ்ஞானி நம்பி நாராயணன் ரெடி என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாதவன் நடித்துள்ள விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு படம் பல நாடுகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட பிறகுதான் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Last Updated : May 15, 2019, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.