4 மங்கீஸ் ஸ்டுடியோஸ் சார்பில் சாம் ஆண்டன் நண்பர்களோடு இணைந்து தயாரித்து இயக்கும் படம் கூர்க்கா. காமெடி மற்றும் ஆக்ஸன் கலந்த திரைப்படமாக 'கூர்கா' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் ஒரு கடத்தப்பட்ட காரை, ஒரு அப்பாவி கூர்காவும் அவரது நாயும் எப்படி கண்டுப் பிடிக்கிறார்கள் என்பதே இப்படத்தின் மையக்கரு.
இப்படம் குறித்து இயக்குநர் சாம் ஆண்டன் கூறுகையில், 'திரைப்படத்தை சரியான திட்டமிடலோடு படப்பிடிப்பை மிக குறுகிய காலத்திலேயே முடித்தோம். இதற்கான பாராட்டுக்கள் அனைத்தும் படக்குழுவினரையே சேரும். நடிகர்கள் யோகி பாபு, கனடா நடிகை எலிஸ்சா நடித்து வரும் இந்த படம், தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் அனைத்து பணிகளும் முடிந்து, கோடை விருந்தாக திரைக்கு வரும் என்று எதிர்பாக்கலாம்' என்றார்.