பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் யோகி. இவர் கடந்த மாதம் 24ஆம் தேதி தனது காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "இருவரும் சேர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்தோம். அப்போது எங்களுக்கு இடையில் காதல் இல்லை. 2 ஆண்டுகளுக்கு முன்னர் பழைய மாணவர்களின் சந்திப்பின்போது அவரைப் பார்த்து காதலில் விழுந்தேன்.
இரு வீட்டாரும் காதலுக்கு சமத்தம் தெரிவித்ததால், கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டோம்" என்று கூறியுள்ளார். கரோனா ஊரடங்கு காரணமாக இவரது திருமணத்திற்கு செல்ல முடியாததால், சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.