மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் கோடியில் ஒருவன். கடந்த வெள்ளியன்று வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் நான்கு மாதங்களாக மூடப்பட்டிருந்தன. மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்ட பின் வெளியான படங்களில் கோடியில் ஒருவன் மட்டுமே லாபம் பார்த்தது. தற்போதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றிக்காக நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் படத்தின் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், நடிகர் விஜய் ஆண்டனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் பேசிய விஜய் ஆண்டனி, ”நான் சிறுவயதில் நன்றாக படிக்க மாட்டேன். அதனால் அம்மாவை ஏமாற்றுவதற்காக சினிமாவில் பணியாற்ற போகிறேன் என்று கூறினேன். உண்மையில் கோடியில் ஒருவன் இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன்தான். நிச்சயம் இவர் மிகப்பெரிய இயக்குநராக வருவார்” என்றார்.