ETV Bharat / sitara

கசடதபற வெளியீட்டில் சிக்கல் - பேச்சுவார்த்தையில் வெங்கட் பிரபு! - kasada tabara release date

சிம்பு தேவன் இயக்கியுள்ள கசடதபற திரைப்படம் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கசடதபற
கசடதபற
author img

By

Published : Aug 27, 2021, 2:29 PM IST

சிம்பு தேவன் இயக்கத்தில் வெங்கட் பிரபு தயாரித்துள்ள படம் 'கசடதபற'. இதில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சந்தீப்கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா, விஜயலட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று (ஆகஸ்ட் 27) சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியானது. ஆனால் படம் வெளியான சிறிது நேரத்திலேயே தயாரிப்பு தரப்பு பிரச்சினை காரணமாக ஓடிடி தளத்திலிருந்து நீக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிப்புற படப்பிடிப்பிற்கு ACS (Out Door Unit) கொடுக்க வேண்டிய பணம் மீதம் இருப்பதால், படத்தை வெளியிடக் கூடாது என அந்நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.

இதனால் கசடதபற படம் வெளியாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்திடமிருந்து NOC கிடைத்த பிறகு சோனி லிவ் தளத்தில் படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இதற்காக வெங்கட் பிரபுவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது.

சோனி லிவ் தனது தளத்திலிருந்து இப்படத்தை நீக்கினாலும், தமிழ் ராக்கர்ஸில் நேற்று (ஆகஸ்ட் 26) மாலையே இப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.