மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் திரைப்படம் 'தலைவி'.
இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இதில் எம்ஜிஆராக அரவிந்த்சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடிக்கின்றனர்.
இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்திற்காக கங்கனா 20 கிலோ உடல் எடையைக் கூட்டினார்.
இந்த படப்பிடிப்பின் இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன. இந்தப் படத்தின் அப்டேட்களை கங்கனா அவ்வப்போது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டுவருகிறார்.
இன்று (டிச.4) ஜெயலலிதா இறந்து நான்காம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு கங்கனா படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படங்களை இன்று காலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
-
உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன்.
— Kangana Ranaut (@KanganaTeam) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
பெண்மையைப் போற்றுவோம். pic.twitter.com/odTEUTjN9F
">உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன்.
— Kangana Ranaut (@KanganaTeam) December 5, 2020
பெண்மையைப் போற்றுவோம். pic.twitter.com/odTEUTjN9Fஉலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன்.
— Kangana Ranaut (@KanganaTeam) December 5, 2020
பெண்மையைப் போற்றுவோம். pic.twitter.com/odTEUTjN9F
இந்நிலையில், கங்கனா ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தும் புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டு, "உலகம் நடிகைகளை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றிய, நமது புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளில் மலரஞ்சலி செலுத்த பெருமைபடுகிறேன். பெண்மையைப் போற்றுவோம்." எனத் தமிழில் பதிவிட்டுள்ளார்.