ETV Bharat / sitara

'விக்ரம்' படக்குழு வெளியிட்டுள்ள மாஸான அறிவிப்பு!

author img

By

Published : Nov 5, 2021, 5:36 PM IST

கமல் நடிப்பில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தின் சிறப்பு முதல் கண்ணோட்டம் நாளை (நவம்பர் 6) வெளியாகும் என அப்படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Vikram
Vikram

தமிழ் சினிமாவில் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், லோகேஷ் கனகராஜ்.

இவர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனின் 232ஆவது படமாகும். 'விக்ரம்' படத்தின் இசை வெளியிட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

'விக்ரம்' படப்பிடிப்பு ஜூலை 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'விக்ரம்' படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி உள்ளிட்டப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. 'விக்ரம்' படத்தின் இசை வெளியிட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

Advance Happy Birthday Ulaganayagan @ikamalhaasan sir🙂
The First Glance into the world of VIKRAM awaits you all tomorrow at 6pm🔥#HBDUlaganayagan#Vikram_April2022 pic.twitter.com/jKSsjKaH0o

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) November 5, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கமல்ஹாசன் நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில், அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் விதமாக 'விக்ரம்' படத்தின் முதல் கண்ணோட்டத்தைப் படக்குழுவினர் நாளை (நவம்பர் 6) மாலை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காவல் அருங்காட்சியத்தில் கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பு

தமிழ் சினிமாவில் 'மாநகரம்', 'கைதி', 'மாஸ்டர்' என ஹாட்ரிக் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், லோகேஷ் கனகராஜ்.

இவர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இது கமல்ஹாசனின் 232ஆவது படமாகும். 'விக்ரம்' படத்தின் இசை வெளியிட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

'விக்ரம்' படப்பிடிப்பு ஜூலை 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், ஷிவானி, காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

'விக்ரம்' படத்தை கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி உள்ளிட்டப் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. 'விக்ரம்' படத்தின் இசை வெளியிட்டு உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

கமல்ஹாசன் நவம்பர் 7ஆம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இந்நிலையில், அவருக்கு பிறந்த நாள் பரிசளிக்கும் விதமாக 'விக்ரம்' படத்தின் முதல் கண்ணோட்டத்தைப் படக்குழுவினர் நாளை (நவம்பர் 6) மாலை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: காவல் அருங்காட்சியத்தில் கமலின் 'விக்ரம்' படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.