ETV Bharat / sitara

தயாரிப்பாளர் தமிழ் மணியனை சந்தித்த பிரபல இந்தி இயக்குநர்! - கே.சி.பொக்காடியா படங்கள்

இந்தியில் பிரபல தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் வலம் வரும் கே.சி.பொக்காடியா, சென்னையில் உள்ள தயாரிப்பாளர் தமிழ் மணியனை நேரில் சென்று சந்தித்துள்ளார்.

பிரபல இந்தி இயக்குநர்
பிரபல இந்தி இயக்குநர்
author img

By

Published : Aug 19, 2021, 2:05 PM IST

பிம்பி புரொடக்‌ஷன் சார்பில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களைத் தயாரித்தவர் கே.சி.பொக்காடியா. இவர் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி படங்களை இயக்கியும் உள்ளார்.

இந்தியில் மட்டும் 38 படங்களை இயக்கியுள்ள இவர், சுமார் 25 ஆண்டுகளாக பல முன்னணி தென்னிந்திய இயக்குநர்களை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்தியில் சுமார் 59 படங்களைத் தயாரித்துள்ளார். அதில் 18 படங்களில் சல்மான் கான், ஷாருக்கான், அமீர் கான் ஆகியோர் நடித்துள்ளனர். 11 படங்களில் அமிதாப் பச்சனும், ரஜினிகாந்த், அக்‌ஷ்ய குமார் தலா ஐந்து படங்களிலும் நடித்துள்ளனர். இவர் ரஜினிகாந்தை வைத்து இந்தியில், Insaniyat Ke Devta, yagi ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

கே.சி.பொக்காடியா
கே.சி.பொக்காடியா

இந்நிலையில் பொக்காடியா தற்போது தமிழ், தெலுங்கில் ஆகிய இரு மொழிகளிலும் படம் ஒன்றைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக இவர் தயாரிப்பாளரும் நடிகருமான தமிழ் மணியன் வீட்டுக்கு இன்று (ஆக.19) திடீரென்று சென்றுள்ளார். அவரிடம் தமிழில் பல படங்களை தயாரிப்பதாக உறுதி அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தடுப்பூசி போட்டும் கரோனா வந்துடுச்சு: புலம்பும் எவர்கிரீன் நாயகி நதியா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.