திருமணத்திற்கு பிறகு '36' வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரியானார் நடிகை ஜோதிகா. படமும் பெரிய வெற்றியை பெற்றது. இதை அடுத்து 'மகளிர் மட்டும்', 'காற்றின்மொழி', 'நாச்சியார்' என, தொடர்ந்து கதாநாயகியை மையமாக இருக்கும் படங்களாகப் பார்த்து நடித்து வருகிறார்.
'காற்றின் மொழி’ திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா, தற்போது பெயரிடப்படாத காமெடிப் படத்தில் நடித்து வருகிறார்.இதனை 'குலேபகாவலி' படத்தை இயக்கிய கல்யாண் இயக்கி வருகிறார். சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் நடிகை ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், ஜோதிகா அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில், அரசு பள்ளி ஆசிரியையாக வலம் வரவிருக்கிறார்.‘காக்க காக்க’ படத்திற்குப் பிறகு மீண்டும் டீச்சராக அவரை திரையில் காணரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். இதில் பூர்ணிமா பாக்கியராஜ், சத்யன், ஹரீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஜோதிகா நடித்து வரும் இந்தப் படத்திற்கு 'ராட்சஷி' என்று பெயர் வைத்திருப்பதாக தயாரிப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.படத்தின் டைட்டில் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.