மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் 'த்ரிஷ்யம்'. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்தப்படம் மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான இப்படம் மோகன்லாலின் திரையுலக வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மோகன்லாலுடன் ஜீத்து ஜோசப் புதிய படத்தில் இணையவுள்ளார். இந்தப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார்.
இதனிடையே இன்று மாலை கேரள மாநிலம் கொச்சியில் புதிய படம் பற்றிய அறிவிப்பை வெளியிடும் வகையில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் 'தம்பி' திரைப்படம் வரும் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தர்பார் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு தேதி - ரசிகர்கள் கொண்டாட்டம்!