ETV Bharat / sitara

இதயங்களைத் தொடர்ந்து வென்றெடுக்கும் 'ஜெய் பீம்' - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்திற்கு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

jai bhim
jai bhim
author img

By

Published : Nov 10, 2021, 9:48 AM IST

நடிகர் சூர்யா தயாரித்து, நடித்திருக்கும் 'ஜெய் பீம்' படத்திற்கு இந்தியத் திரை உலகைச் சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். தமிழ் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட இந்தியத் திரையுலகின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களும் படத்திற்கு தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

உன்னதமான படைப்பு

நடிகர் மாதவன் தன்னுடைய பதிவில், ''சில திரைப்படங்கள் உங்கள் கவனத்தை சிதறடித்து, உங்களை சுற்றியுள்ள உலகத்தை பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொள்ளத் தூண்டுகின்றன. 'ஜெய் பீம்' படத்தின் புத்திசாலித்தனமான படைப்புத்திறன், படத்தை ஈடுபாட்டுடன் காண தூண்டுகிறது. உன்னதமான படைப்பு. அதன் நோக்கத்துடன் உங்களையும் கவர்ந்திழுக்கிறது" என பாராட்டியுள்ளார்.

நடிகர் அரவிந்த்சாமி கூறுகையில், "சூர்யா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. ஜெய் பீம் என்ற உன்னதமான படைப்பை வழங்கிய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கு என்னுடைய இதயம் நிறைந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்'' என பதிவிட்டுள்ளார்.

அற்புதமான படைப்பு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது பதிவில், ''ஜெய் பீம் துணிச்சலான படைப்பு. ஒடுக்கப்பட்டவர்களின் வலியை உணர்த்துவதுடன், நீதித்துறை மீது நம்பிக்கையும் ஏற்படுத்துகிறது. தவறாமல் காண வேண்டிய அற்புதமான படைப்பு'' என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் நானி கூறுகையில், ''ஜெய் பீம் படம் பார்த்தேன். சூர்யாவுக்கு மரியாதை கலந்த வணக்கம். படத்தில் செங்கேணி, ராஜா கண்ணுவாக நடித்த நடிகர்களின் நடிப்பு தனித்துவம் மிக்கது. படக்குழுவினருக்கும், அவர்களது கடின உழைப்பிற்கும் என் வாழ்த்துக்கள்'' என தெரிவித்துள்ளார்.

தலை முறையை மாற்றும்

இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், ''சாதி எதிர்ப்பையும், சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே- இதோ மறைக்கப்பட்ட. மறுக்கப்பட்ட.. ராஜா கண்ணுவின் கதை போல பல கதைகள் இனிவரும்.

அது நம் தலை முறையை மாற்றும். ஜெய் பீம் திரைப்படத்தை கொடுத்த சூர்யா, இயக்குநர் த.செ. ஞானவேல், 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், படக்குழுவினருக்கு நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.