நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான அசுரன், பட்டாஸ் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கும், 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்து வருகிறார். ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் சசிகாந்த் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி நடிக்கிறார்.
அதேபோல் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் புதிய போஸ்ட்டரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
#suruli He is coming soon pic.twitter.com/LTM2dVobhU
— Dhanush (@dhanushkraja) March 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#suruli He is coming soon pic.twitter.com/LTM2dVobhU
— Dhanush (@dhanushkraja) March 9, 2020#suruli He is coming soon pic.twitter.com/LTM2dVobhU
— Dhanush (@dhanushkraja) March 9, 2020
அதில், தனுஷ் வெள்ளை வேட்டி, சட்டை அணிந்து கையில் இரண்டு தூப்பாக்கிகள் ஏந்தியவாறு மிகவும் ஸ்டைலாக நின்றுள்ளார். மேலும் ’’சுருளி வருகிறான்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதவிர தனுஷ் தமிழில் கர்ணன், பாலிவுட்டில் சாரா அலிகான், அக்ஷய் குமாருடன் இணைந்து 'அட்ராங்கி ரே' போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருப்பதியில் தனுஷ் சாமி தரிசனம்