திரைத் துறையில் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான பிரிட்டிஷ் அகாதமி ஆஃப் ஃபிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் எனப்படும் பிரபல பாஃப்டா விருதுகள் வழங்கும் விழா லண்டனில் நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த 73ஆவது பாஃப்டா விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல், கடந்த ஜனவரி ஏழாம் தேதி வெளியிடப்பட்டது.
சமீபத்தில் நடந்துமுடிந்த கோல்டன் குளோப் விருதுகளைப் போலவே, திரை ஆர்வலர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டதுபோல் சிறந்த நடிகர் உள்பட, ஜோக்கர் திரைப்படம் மூன்று பிரிவுகளில் விருதுகளை அள்ளியது.
மேலும் மேரேஜ் ஸ்டோரி, ஒன்ஸ் அபான் அ டைம் இன் ஹாலிவுட், 1917 உள்ளிட்ட படங்களும் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை அள்ளின.
விருதுபெற்ற படங்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு:
- சிறந்த திரைப்படம்: 1917
- சிறந்த முன்னணி நடிகர்: நடிகர் ஜொகியின் ஃபீனிக்ஸ் (Joaquin Phoenix) - திரைப்படம் ஜோக்கர்.
- சிறந்த முன்னணி நடிகை: ரெனீ ஜெல்வெஜெர் (Renee Zellweger) - திரைப்படம் ஜூடி
- சிறந்த இயக்குநர்: சாம் மெண்டீஸ் (Sam Mendes) - 1917 திரைப்படம்
- சிறந்த நடிகர், நடிகையர் தேர்வு: ஜோக்கர் திரைப்படம்
- சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம்: பாரஸைட்
- சிறந்த துணை நடிகர்: பிராட் பிட் (Brad Pitt) - ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம்
- சிறந்த மூலத் திரைக்கதை: ஹான் ஜின் வன், போங் ஜூன் ஹோ - பாரசைட் திரைப்படம்.
- சிறந்த ஆவணப்படம்: ஃபார் சமா (For Sama)
- சிறந்த திரைக்கதை தழுவல்: டைகா வய்டிட்டி (Taika Waititi) - ஜோஜோ ரேபிட் (Jojo Rabbit) திரைப்படம்
- சிறந்த துணை நடிகை: லாரா டெர்ன் (Laura Dern) - மேரேஜ் ஸ்டோரி
- சிறந்த ஒளிப்பதிவு: ரோஜர் டெக்கின்ஸ் (Roger Deakins) - 1917
- சிறந்த எடிட்டிங்: ஆண்ட்ரூ பக்லேண்ட் மற்றும் மிக்ஷேல் மெக்கஸ்கர் - லீ மேன்ஸ்’ 66 (Le Mans '66) திரைப்படம்
- சிறந்த இசை: ஸ்காட் மில்லன், ஆலிவர் டேமி, ரேச்சல் டேட், மார்க் டெய்லர், ஸ்டூவார்ட் வில்சன் - 1917 திரைப்படம்
- சிறந்த ஒரிஜினல் ஸ்கோர்: ஹில்டர் குட்நாடோட்டிர் (Hildur Gudnadottir) - ஜோக்கர் திரைப்படம்.
- சிறந்த அனிமேஷன் திரைப்படம்: க்ளாஸ் (Klaus)
- அவுட்ஸ்டேண்டிங் ப்ரிட்டிஷ் திரைப்படம்: 1917
இதையும் படிங்க: 10 ஆஸ்கர் பரிந்துரைகள் - பார்வையாளர்களை மிரட்டிய ‘1917’