பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்தராவில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டார்.
அவரது மரணம் குறித்தான காரணம் இன்னும் மர்மாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு பயோபிக் எடுக்க பாலிவுட் வட்டாரங்கள் முனைப்பு காட்டி வருகிறது.
அதில், இயக்குநர் திலீப் குலாட்டி சுஷாந்த் சிங் ராஜ்புத் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு 'நய்யே: தி ஜஸ்டிஸ்' என்னும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தாக ஜுபர் கானும், ரியா சக்ரபோர்தியாக ஷ்ரேயா சுக்லாவும் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், தனது மகன் குறித்தான எந்த பயோபிக் திரைப்படமும் வெளியிடக்கூடாது என சுஷாந்த் சிங்கின் தந்தை கிருஷ்ணா கிஷோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை மீறி யாரேனும் படத்தை வெளியாட்டால் மானநஷ்ட ஈடாக அதன் தயாரிப்பாளர்கள் ரூ. 2 கோடி வழங்க வேண்டும் எனக் கூறினார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது படக்குழுவினர், சுஷாந்த் சிங் குறித்தோ அவரது பெயரே படங்களே தங்களது படத்தில் பயன்படுத்தவில்லை. இது ழுழுக்க ழுழுக்க தங்களது கற்பனையில் உருவானது எனக் கூறினர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி 'நய்யே: தி ஜஸ்டிஸ்' படம் வெளியாக எந்தத் தடையும் இல்லை எனக் கூறி கிருஷ்ணா கிஷோரின் வழக்கை தள்ளுபடி செய்தனர்.