ETV Bharat / sitara

அழகியலின் அரசன் பன்சாலி- #HBDSanjayLeelaBhansali

அழகியலின் அரசன் பன்சாலி குறித்த செய்தி தொகுப்பை காணலாம்.

happy Birthday Sanjay Leela Bhansali special news

author img

By

Published : Feb 25, 2020, 12:03 AM IST

57 வயதான இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இந்திய சினிமாவிலேயே முக்கியமானதொரு தயாரிப்பாளரும், இயக்குநருமாவார்.

இவர் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான பத்மாவத் திரைப்படத்திற்காக பல பிரச்னைகளை பன்சாலி சந்தித்தார்.

இதுவரை எந்த தயாரிப்பாளரும் சந்தித்திராத இன்னலை அந்த நேரத்தில் பன்சாலி சந்தித்தார். ஆனால் பத்மாவத் திரைப்படம் வெளியானப் பிறகு அதற்கு விமர்சன ரீதியாக கிடைத்த பாராட்டு அவரின் அத்துணை காயங்களுக்கும் மருந்து போட்டது.

இதையடுத்து கருத்துச் சுதந்திரம் குறித்து மிகவும் அச்சுறுத்தல் கொண்டவராக பன்சாலி தன்னை பிரதிபலித்தார்.

happy Birthday Sanjay Leela Bhansali special news
பத்மாவத்

ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்சிகளிலும் பிரம்மாண்டத்தை காண்பித்தவராக பன்சாலி திகழ்ந்தார்.

நாம் நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு ஆடம்பரமாக பன்சாலியின் அரச குடும்பங்கள், மாளிகைகள், வாழ்க்கை முறை இருக்கும்.

தன் படத்தின் ஒவ்வொறு ஃபிரேமிலும் ஆடம்பரத்தையும், அழகியலையும் உணர்த்துவார் பன்சாலி.

ராம்லீலா

பன்சாலி இயக்கத்தில் நடிப்பது பாலிவுட்டின் கதாநாயகர்கள் ஒவ்வொருவரின் கனவாக இருக்கிறது. கதாநாயகனுக்கு சரிசமமான பாத்திர படைப்பு கதாநாயகிகளுக்கும் இருக்கும். பாலிவுட்டின் தேவசேனைகளுக்கு பன்சாலியின் இளவரசியாக இருக்கவேண்டும் என்பது ஒரு மறுபிறவி எடுப்பதைபோலத்தான்.

சாவரியா திரைப்படத்தில் சோனம் கபூர், தேவதாஸ் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராய், ராஸ்லீலா , பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் திரைப்படத்தில் தீபிகா படுகோனே என்று ஒவ்வொரு திரைப்படத்திலும் கதாநாயகிகளின் பாத்திரப் படைப்பை பார்த்து பார்த்து செதுக்கியிருப்பார் பன்சாலி.

பன்சாலியின் கதாநாயகிகள்

அவரது திரைப்படங்களில் கிஞ்சித்தும் யதார்த்தம் இல்லை என்று பலரும் அவரை விமர்சனம் செய்த நிலையில், "ஒவ்வொரு படைப்பாளிக்கென்றும் ஒரு தனிபட்ட சினிமா யதார்த்தம் கற்பனையில் இருக்கிறது.

சினிமா என்பது வெவ்வேறு கலை வடிவங்களின் ஒருங்கிணைப்பாகும். ஒரு படப்பிடிப்பு தளத்திற்கு நான் செல்லும்போதும் அதை கண்டு வியப்படைகிறேன், அது படப்பிடிப்பு தளம் மட்டுமல்ல, அது என் கோயில், நான் வழிபடும் இடம்" என்று பன்சாலி பதிலளித்தார்.

சினிமாவை ஒருவன் எவ்வளவு நேசித்தால் இப்படி கூற முடியும். இந்த பைத்தியக்கார நேசம் பன்சாலியின் சிறு வயதிலேயே தொடங்கியது.

பாஜிராவ் மஸ்தானி படப்பிடிப்பு

ஒருமுறை தன் தந்தையுடன் சிறு வயதில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றார். கேபரே நடனம் படம்பிடிக்கப்பட்ட அந்த இடத்தை கண்டு வியந்துபோன அவருக்கு இனி இதுதான் நம் உலகம் என்ற உந்துதல் ஏற்பட்டது.

சினிமாவுக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சொற்ப அளவிலான படங்களையே பன்சாலி இயக்கியுள்ளார். ஒவ்வொரு படைப்பை உருவாக்குவதற்கு போதுமான நேரத்தை ஆராய்ச்சி செய்வதிலேயே செலவிடுவதனால் சில ஆண்டுகள் கணக்கில் ஒரு படத்தை மட்டும் அவரால் கொடுக்கமுடிகிறது.

2018ஆம் ஆண்டு பத்மாவத் திரைப்படம் வெளியான பின்பு ஆலியா பட் நடிக்கும் கங்குபாய் கதியாவாடி திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

தீபிகா, ரன்வீர் சிங்குடன்

இயக்குநராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும் பன்சாலி உருவெடுப்பார். தனது பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற திரைப்படங்களுக்கு பன்சாலியே இசையமைத்தார். தனது அடுத்தப் படைப்பான் கங்குபாய் கதியாவாடி திரைப்படத்திற்கும் பன்சாலி இசையமைக்கிறார். இத்திரைப்படம் வெளியாக ரசிகர்கள் பலரும் காத்திருக்கும் நிலையில் நாமும் அவரை வெற்றியடைய வாழ்த்துவோம்.

இதையும் படிங்க: விஷாலிடம் 40 இல்ல 400 கோடி கேட்டேன் - இயக்குநர் மிஷ்கின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.