சென்னை : 90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவை கலக்கிய முன்னணி நடிகைகளில் ஒருவர் லைலா. இவர் தமிழ் திரையுலகில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அஜித் நடித்த 'தீனா', 'விக்ரம் நடித்த 'தில்' சூர்யாவுடன் 'பிதாமகன்' என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார். தில், தீனா, மௌனம் பேசியதே ஆகிய திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தன.
பிதாமகன் படத்தில் இவரது நடிப்பு மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. குறிப்பாக பிதாமகன் படத்தில் ரயிலில் இடம்பெற்ற காமெடி காட்சி அனைவரையும் கவர்ந்தது என்றே சொல்லலாம். இப்படம் குறித்து லைலா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.
அதில், ”ரயிலில் இடம்பெற்ற காமெடி காட்சி படப்பிடிப்பு தேனி அருகே உள்ள 2 ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்டது. கிட்டத்தட்ட பத்து நாள்கள் இந்த படப்பிடிப்பில் நான் கலந்துகொண்டேன். இந்த பத்து நாள்களும் எனது மறக்க முடியாத நாள்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இவரது குழந்தை தனமான சிரிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். இவர், கள்ளழகர், ரோஜாவனம், பார்த்தேன் ரசித்தேன், தில், தீனா, உன்னை நினைத்து, அள்ளித்தந்த வானம், காமராசு, நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே (சிறப்புத் தோற்றம், திரீ ரோசஸ், கம்பீரம், பரமசிவன், திருப்பதி, ஜெய்சூர்யா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர், ஈரான் நாட்டு தொழில் அதிபரான மெஹதீன் என்பவரை காதலித்து 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
இவர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இன்று இவர் தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க : நெஞ்சை கிள்ளி செல்லும் பஞ்சு மேனிக்காரி எல்லி!