ETV Bharat / sitara

'நீண்ட மாதங்களுக்குப் பிறகு திரையரங்கில் திரைப்படங்கள் வெளியாவது மகிழ்ச்சி' - நடிகர் சூரி

மதுரை: கரோனா பெருந்தொற்றின் காரணமாக நீண்ட மாதங்களுக்குப் பிறகு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

Glad to see movies released in theaters after long months - Actor Suri

author img

By

Published : Jan 13, 2021, 11:49 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா ஆகிய நட்சத்திர பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே வெளிவர வேண்டிய இப்படம் கரோனா காரணமாக தற்போது பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 800க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ள மாஸ்டர் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இத்திரைப்படத்தை பிரபல நகைச்சுவை நடிகர் சூரி இன்று திரையரங்கில் சென்று பார்த்தார். அதன்பின் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “கரோனா காலத்தில் அனைத்து துறைகளுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் திரைப்படத் துறையும் திரையரங்குகளும் மட்டும் விதிவிலக்கல்ல.

நீண்ட மாதங்களுக்கு பிறகு திரையரங்கில் திரைப்படங்கள் வெளியாவது மகிழ்ச்சி

இன்று வெளியான விஜய் மற்றும் சிம்பு திரைப்படங்கள் மூலமாக திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை தந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். அதே சமயத்தில் கரோனா குறித்து தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருகின்ற நடைமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும். ரசிகர்களும் மிக எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மாஸ்டர் தயாரிப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.