ஹாலிவுட் நடிகர் டேனி ஹிக்ஸ் 1987 ஆம் ஆண்டு வெளியான 'ஈவில் டெட்' படத்தில் 'ஜாக்' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இது இவரது திரை வாழ்க்கையில் மிக முக்கிய கதாபாத்திரம் ஆகும். பின் 'இன்ட்ரூடர்', 'ஸ்பைடர் மேன் 2', 'டார்க்மேன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.
68 வயதான டான்ஸ் ஹிக்ஸ் சமீபத்தில் சமூக வலைதளத்தில் தனக்கு புற்றுநோய் உள்ளது என தெரிவித்திருந்தார். அதில், “நான் ஒருபோதும் சந்திக்காத மக்களுக்கும் எனது அன்பார்ந்த ரசிகர்களுக்கும் ஒரு கெட்ட செய்தி உங்களுக்காக காத்திருக்கிறது.
எனக்கு புற்றுநோய் உள்ளது. அதுவும் நான்காம் நிலை. நான் இன்னும் ஒன்று அல்லது மூன்று ஆண்டுகள் மட்டுமே வாழ்வேன்” என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த 68 வருடங்கள் நான் இவ்வுலகில் என் முழு வாழ்க்கையை வாழ்ந்து விட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
நான் என் மரணம் குறித்து கவலைப்படவில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அந்த மர்ம உலகில் என்ன நடக்கப்போகிறது என்பதை நான் கண்டு பிடிக்கப் போகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் டேனி ஹிக்ஸ் இன்று ( ஜூலை 2) உயிரிழந்தார். இந்தச் செய்தியை அவரது சமூக வலைதளப் பக்கத்தை நிர்வகிக்கும் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அதில், “டேனி ஹிக்ஸ் அவரத வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார். நாங்கள் உங்களை மிகவும் நேசிக்கிறோம். உங்களது ஆன்மா இளைப்பாறட்டும். ஓய்வெடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞர்களின் நாயகி ஐஸ்வர்யா மேனன் புகைப்படத் தொகுப்பு...