பாலிவுட் நடிகை திஷா பதானி தமிழில் தோனி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்பங்களை வெளியிட்டு ரசிகர்களைக் கிரங்கடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் திஷா பதானி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவரிடம் காதல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 'இது மிகவும் முக்கியமானது. வாழ்க்கையில் நீங்கள் செய்யும் அனைத்தும் அன்பிற்காக அல்லது அன்பின் காரணமாக இருக்கும். காதல் இல்லாமல் எப்படி வாழ முடியும்?
பார்த்தவுடன் காதல் என்பதை நான் நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை காதலிப்பது மிகவும் முக்கியம். முதல் சந்திப்பில் நான் அதை உணரவில்லை என்றால், காதல் அங்கு இல்லை என்று அர்த்தம். நான் என்னை ஒரு பெண்ணாக உணர வைக்கும் ஒருவரைத் தேடுகிறேன். காதலில் மிகச்சிறிய விஷயங்கள் கூட முக்கியமானவை' என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: 'சைக்கோ-2 படம் கண்டிப்பாக வரும்' - உதயநிதி ஸ்டாலின்