இது தொடர்பாக இயக்குநர் வடிவுடையான் கூறியதாவது, "இன்று காலை முதல் என்னைப் பற்றி தவறான செய்தி ஒன்று தொலைக்காட்சி, சமூகவலைதளங்களில் ஒளிபரப்பாகி வருகிறது. நரேஷ் கோத்தாரி என்பவரிடம் நான் விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி ரூ.47 லட்சம் பணம் கடன் வாங்கிவிட்டு அதனை திருப்பி கொடுக்கவில்லை என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அது முற்றிலும் தவறானது, நரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை” என்று கூறியுள்ளார்.
இதையடுத்து நான் கடந்த ஆண்டு அசோக் லோதா என்பவரிடம் ரூ.3 லட்சம் கடனாகப் பெற்றேன். அதற்காக நிரப்பப்படாத காசோலை, என் கையெழுத்திட்டப் பத்திரம் போன்றவற்றை கொடுத்து பணம் பெற்றேன். ஆனால் அந்தத் தொகையை வட்டியும், முதலுமாக அவருக்கு திருப்பி கொடுத்துவிட்டேன். ஆனால் அவர் என் காசோலையையும், பத்திரத்தையும் திருப்பி தர மறுத்ததால், நான் அவர் மீது சென்னை 6ஆவது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. அதனால் கோபமடைந்த அசோக் லோதா எனது நிரப்பப்படாத காசோலையையும், பத்திரத்தையும் நரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து அதில் நான் அவரிடம் பணம் பெற்றது போல் நிரப்பி தவறாக பயன்படுத்தி உள்ளாரோ என்று எனக்கு சந்தேகம் உள்ளது. எனது பெயருக்கும், புகழுக்கும் கலங்கம் விளைவிப்பதற்காக இது போல் பொய்யான பழியை என் மீது சுமத்தியுள்ளவர்கள் மீது நான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்த முந்தையச் செய்தி: விஷாலை வைத்து படம் எடுப்பதாக மோசடி: இயக்குநர் மீது புகார்!