ETV Bharat / sitara

'இந்தியன்-2'வில் மாற்றம்: இயக்குநர் ஷங்கர் முடிவு - director shankar brings change in indian sequel

'இந்தியன்-2' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை இயக்குநர் ஷங்கர் மாற்றியுள்ளதை அடுத்து, படத்தில் மீண்டும் மாற்றம் ஒன்றை செய்ய ஷங்கர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டு வருகிறது.

Director shankar to make indian sequel in two parts

author img

By

Published : May 21, 2020, 8:28 PM IST

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகிவரும் 'இந்தியன்-2' திரைப்படம் படப்பிடிப்பின்போதே பல இடையூறுகளைச் சந்தித்தது. கமல்ஹாசன் அறுவை சிகிச்சை, படப்பிடிப்பு விபத்து எனப் பல காரணங்களால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கின் காரணமாக, நின்றுபோன படப்பிடிப்பு, ஊரடங்கு முடிந்தபிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தை அடுத்து, படப்பிடிப்பு தளத்தை பின்னி மில்லுக்கு மாற்றம் செய்யவுள்ளதாக இயக்குநர் தரப்பில் முடிவு எடுக்கப்பட்டது.

இதையும் படிங்க... படப்பிடிப்பு தளத்தை மாற்றவுள்ள ஷங்கர் - விபத்து விவகாரத்தால் முடிவு!

இதையடுத்து மீண்டும் படத்தில் மாற்றம் இடம்பெற உள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்பை ஒரே தருணத்தில் முழுவதுமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அதிகப்படியான ஃபுட்டேஜ்கள் இருப்பதால், படத்தை இரு பாகங்களாக வெளியிடலாம் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.