ETV Bharat / sitara

பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கிய டாம் ஹாங்ஸ் - பிளாஸ்மா

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நடிகர் டாம் ஹாங்ஸ், தனது பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

tom hanks
tom hanks
author img

By

Published : May 29, 2020, 9:08 PM IST

ஹாலிவுட்டில் 'Forrest Gump', 'Catch Me If You Can', 'The Terminal', 'Captain Phillips', 'The Da Vinci Code' உள்ளிட்ட பல படங்களில் நடித்து உலகம் முழுவதும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டாம் ஹாங்ஸ்.

புதிய படத்தின் படப்பிடிப்புக்காக டாம் ஹாங்ஸ், தனது மனைவி ரீட்டா வில்சனுடன் ஆஸ்திரேலியாவிற்குச் சென்றார். அங்கு சென்ற அவர்களுக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அவர்கள், அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். பாதிப்பிலிருந்து குணமானபின் அவர்களிருவரும் லாஸ் ஏஞ்சல்ஸூக்கு திரும்பினர். இந்த ஜோடி கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான முதல் ஹாலிவுட் பிரபலம் என பெயர் பெற்றனர்.

கரோனாவிலிருந்து மீண்ட இவர்கள் இந்த தொற்று குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து டாம் ஹாங்ஸ், தனது இரத்த பிளாஸ்மாவை கரோனா வைரஸ் ஆராய்ச்சி பணிக்காக வழங்கியுள்ளார்.

இது குறித்து தனது சமூகவலைத்தளப்பக்கத்தில், ஹாங்ஸின் பிளாஸ்மாடிக் என குறிப்பிட்டு புகைப்படங்ககளை வெளியிட்டுள்ளார். கரோனாவுக்கு எதிரான ஆராய்ச்சி பணிகளுக்கு டாம் ஹாங்க்ஸின் இந்த முயற்சியை நெட்டிசன்களும் ரசிகர்களும் திரைப்பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்க முன்வந்த கனிகா கபூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.