'காக்டெய்ல்' பட கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கிய கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது. அதன் அடிப்படையில்தான் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் விஜயமுருகன் தெரிவித்துள்ளார்.
பி.ஜி. மீடியா ஒர்க்ஸ் சார்பில் அறிமுக இயக்குநர் விஜயமுருகன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் 'காக்டெய்ல்'. யோகிபாபுவுடன் ரமேஷ், மிதுன் மற்றும் 'விஜய் டிவி கலக்கப்போவது யாரு' புகழ் பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, மனோபாலா, மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இவர்களுடன் இந்திய சினிமாவில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 'காக்டெய்ல்' என்ற கிளி முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்தப் பறவையுடன் ஒரு முருகன் சிலையும் படத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது.
இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் யோகிபாபு முருகன் வேடத்தில் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை பார்த்துவிட்டு சில இந்து அமைப்புகள் படத்தில் முருகனை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும், இது தங்களது மத உணர்வைப் புண்படுத்துவதாகவும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் விஜய முருகன், 'நிச்சயமாக யார் மனதின் உணர்வுகளையும் புண்படுத்தும் விதமாக இந்தப் படத்தின் கதையும், இந்த போஸ்டரும் உருவாக்கப்படவில்லை. என் பெயரிலேயே முருகனைக் கொண்டுள்ள நானும் ஒரு முருக பக்தன். யோகிபாபுவும் ஒரு முருக பக்தர். அதனால் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இப்படி செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை. இந்தப் படத்தின் கதைப்படி முருகன் சிலை, ஒரு முக்கியக் கதாபாத்திரமாகவே இடம்பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில்தான் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நாங்கள் வடிவமைத்தோம். நாங்கள் வழிபடும் கடவுளை நாங்களே எப்படி தவறாக சித்தரிப்போம். முருகனையும் சிவனையும் கொண்டாடும் நாம் திருவிழாக்களில் முருகர் வேடமிடுகிறோம். சிவன் வேடம் அணிகிறோம். மாறுவேடப்போட்டிகளில், தமிழர் கலை சார்ந்த பண்பாட்டு நிகழ்ச்சிகளில் வேடங்கள் அணிகிறோம்.
எம் முருகப் பெருமானை வேடமிட்டு ஆராதிப்பது தமிழ்நாட்டு மக்களின் வாடிக்கை தானே. அதையே சினிமாவில் காட்டும்போது மட்டும் எப்படி தவறாகி விடும். இதை முருகன், சிவனைப் போன்ற கடவுளை வழிபடும் ஒவ்வொருவருக்கும் உண்டான தனிப்பட்ட உரிமையாகத்தான் பார்க்கிறோம்.
-
#Cocktail pic.twitter.com/mUjv5j9r7B
— Yogi Babu (@yogibabu_offl) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Cocktail pic.twitter.com/mUjv5j9r7B
— Yogi Babu (@yogibabu_offl) February 3, 2020#Cocktail pic.twitter.com/mUjv5j9r7B
— Yogi Babu (@yogibabu_offl) February 3, 2020
இது ஒரு மதுவை மையப்படுத்திய படமும் அல்ல. இந்தப் படத்திற்கு வைக்கப்பட்டுள்ள 'காக்டெய்ல்' என்கிற டைட்டில் கூட ஆஸ்திரேலியாவில் வாழும் ஒரு கிளியை மையப்படுத்தியே வைக்கப்பட்டுள்ளது. தவிர, அதற்கும் வேறு எந்த தவறான காரணமும் இல்லை.
அதனால்தான் இந்த போஸ்டரில் முருகனின் வாகனமான மயிலைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, அந்த 'காக்டெய்ல்' என்கிற கிளியை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம்' என்றார்.
இதையும் படிங்க: