ETV Bharat / sitara

நயன்தாரா குறித்து சர்ச்சை கருத்து; ராதாரவிக்கு எதிராக கொந்தளிக்கும் பிரபலங்கள்..!

நயன்தாரா குறித்து தரம் தாழ்ந்து கருத்து தெரிவித்த ராதாரவிக்கு எதிராக, விக்னேஷ் சிவன், சின்மயி, வரலட்சுமி, ராதிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

file pic
author img

By

Published : Mar 24, 2019, 7:40 PM IST

Updated : Mar 24, 2019, 11:30 PM IST

கொலையுதிர் காலம் படத்தின் டிரெய்லர்வெளியீட்டு விழாவில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசியபோது, "நயன்தாரா அனைத்து கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். நயன்தாரா, சீதை வேடமும் போட்டுள்ளார். பேய் வேடமும் போட்டுள்ளார்.முன்பெல்லாம் சாமி வேஷம் போட வேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவை தான் தேடுவார்கள். ஆனால் இப்போது நிலைமை வேறுமாதிரியாக இருக்கிறது.இப்போது எல்லாம் பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் சாமி வேடத்தில் நடிக்கலாம். பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்" என்றார்.

ராதாரவியின் பேச்சுக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவர் பேசிய வீடியோவையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் ராதாரவியின் பேச்சுக்கு பல்வேறு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களும் ட்விட்டரில் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்

Twetter
Vignesh

ராதாரவியின் பேச்சு குறித்து நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு பாரம்பரியமிக்க குடும்பத்திலிருந்து வந்தவரிடம், அருவருப்பான கருத்துகளை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். யார் இவர் மீதுநடவடிக்கை எடுப்பார்களோ? யார் எனது கண்டன குரலுக்கு ஆதரவு கொடுப்பார்களோ? மூளையற்ற நபர், தன் மீதுகவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இதனை செய்கிறார். இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால் அவருடைய கீழ்தரமான கருத்திற்கு, அரங்கில் அமர்ந்திருந்தவர்கள் கைத்தட்டி, சிரித்து ஆரவாரம் செய்ததுதான், வேதனையின் உச்சமாக உள்ளது.

Twetter
Vignesh

இவர் மீது நடிகர் சங்கமோ, வேறு எதாவது சங்கமோ நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. இப்படத்தை தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னரே கைவிட்டுவிட்டனர் என்றுதான் நான் நினைத்தேன். இப்போது நடந்தது சற்றும் பொருத்தமில்லாத நிகழ்ச்சியாகும். தேவையற்ற நபர்கள் கலந்து கொண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசியுள்ளனர். இதுதான் ஒரு படத்தை புரமோட் செய்யும் விதம் என்றால் இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளில் இருந்து விலகி நிற்பதே நலம் என்றுகண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

பாடகி சின்மயி

Twetter
Chinmayi

ராதாரவின் இந்த பேச்சுக்கு பாடகி சின்மயி ’என்னுடைய பிரச்னையில் தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் எந்தஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால் வேறு யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்ற காரணத்தினால்தான். ஆனால் இப்போது அந்த நபர், சினிமாவில் மிகவும் வெற்றிகரமாக தன்னை நிரூபித்த நடிகையை குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். இப்போதாவது நடவடிக்கை எடுங்கள். ‘முடிந்தால் எடுங்கள்’ என்று கேட்டுள்ளார்.

வரலட்சுமி சரத்குமார்

Twetter
Varalaxmi

பெண்களை அவமதிப்பது, கேவலப்படுத்தி ஜோக்ஸ் சொல்வது, பெண்களை அழகுப் பொருளாக பார்ப்பது எல்லாம் திரையுலகில் சகஜமாகிவிட்டது. இது தவறு என்று சொல்லாமல் அமைதியாக இருந்த முந்தைய தலைமுறை நடிகர்கள்...நடிகர்களால்தான் இப்படியாகிவிட்டது.உங்களுக்கு நடந்தால்தான், நாங்கள் எதற்காக போராடினோம் என்பதை உணர்வீர்கள்... மீடூவின் போது எனக்கோ, சின்மயிக்கோ, பல பெண்களுக்கோ திரையுலக பெண்கள் ஆதரவு அளித்திருந்தால் மாற்றம் ஏற்பட்டிருக்கும்... அமைதியாக இருப்பது பலனில்லை.

ஆணாதிக்கவாதிகளால் நடத்தப்படும் சினிமா சங்கங்கள் இது குறித்து எதுவும் செய்யாது. ஆனால் பெண்களை ஆதரிப்பது போன்று நடிக்கும் என்று வரலட்சுமி சரத்குமார் விளாசியுள்ளார்.

ராதிகா சரத்குமார்

Tweeter
Radikaa

தற்போதைய காலத்தில் நயன்தாரா போல் அர்ப்பணிப்பு தன்மையுள்ளவர்களில்வெகுசிலரே உள்ளனர். அவருடன் பணிபுரிந்த காலங்களில் அவரை பற்றி பல விஷயங்களை தெரிந்து கொண்டவர்என்ற முறையில் இதை நான் கூறுகிறேன். ராதாரவி பேசிய வீடியோ முழுவதையும் நான் பார்க்கவில்லை. இருப்பினும் ராதாரவியை இன்று சந்தித்து அவரது கருத்து தவறானதுஎன்று எடுத்து கூறினேன்' என்று தெரிவித்துள்ளார்.

Intro:Body:Conclusion:
Last Updated : Mar 24, 2019, 11:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.