விஷால் நடித்துள்ள சக்ரா திரைப்படம் வெளியாக விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எத்தனை தடைகள், பிரச்னைகள் வந்தாலும் நான் எனது தொழிலுக்கும் சினிமாத்துறைக்கும் உண்மையாக இருந்துள்ளேன். சக்ரா திரைப்படத்திற்கான நீதிமன்ற தடை விலகியுள்ளது.
நாளை இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. சரியான நேரத்தில் தடையை நீக்கிய உயர் நீதிமன்றத்திற்கு நன்றி. சக்ரா திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும். வாய்மையே வெல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க...'கேசிஆர் பிறந்தநாள் பரிசாக வழக்கறிஞர் தம்பதி கொலை!'