சினிமா இயக்குநரும், நடிகர் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ. சந்திரசேகரின் 70ஆவது படமாகவும், நடிகர் ஜெய்யின் 25ஆவது படமாகவும் ‘கேப்மாரி’ உருவாகியது. அதுல்யா ரவி, வைபவி ஷாண்டில்யா ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சத்யன், பிரியதர்ஷ்னி, பவர்ஸ்டார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இன்று வெளியிட்டார். ட்ரெய்லர் முழுவதும் இரட்டை அர்த்த வசனங்களாக நிரம்பி வழிகின்றன. இந்த ட்ரெய்லர் சமூக வலைத்தளவாசிகள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. சித்விபின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.