மும்பை: பிறந்தநாளில் ரசிகர்களுக்கு ட்ரீட் தரும் விதமாக பிகினி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை இலியானா.
தெலுங்கு சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான இலியானா, அங்கு கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்தார். தமிழில் விஜய் ஜோடியாக நண்பன் படத்தில் நடித்தார். பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் இவர், தற்போது இந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராகத் திகழ்கிறார்.
நாள்தோறும் சமூக வலைத்தளங்களில் தவறாமல் ஏதாவது அப்டேட் செய்வதை பொழுதுபோக்காகவே கொண்டுள்ளார் இலியானா. குறிப்பாக தன்னை விதவிதமாக புகைப்படம் எடுத்து பதிவிட்டு ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளும் அவர், பிகினி, கவர்ச்சி உடை அணிந்த புகைப்படங்களையும் பதிவிட்டு பலரை சூடேற்றியும் வருகிறார்.
நவம்பர் 1ஆம் தேதி தனது பிறந்தநாள் கொண்டாடிய அவர், ரசிகர்களுக்கு அன்றைய நாள் ஸ்பெஷலாக பிகினி அணிந்தவாறு எடுத்துக்கொண்ட பூமராங் விடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இதில், நீள நிற பிகினி அணிந்த கூலிங் கிளாஸுடன் சன் பாத் எடுக்கும் இலியானாவின் கவர்ச்சி தரிசனத்தை பார்த்து ரசிகர்கள் வாவ் கொட்டி வருகிறார்கள்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
இது ஒருபுறம் இருக்க ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் இலியானாவை வாழ்த்து மழையில் நனையவைத்துள்ளனர்.