'பிகில்' படத்தில் விஜய் தனது குரலில் பாடிய வெறித்தனம் பாடலின் தெலுங்கு வெர்சன் தற்போது வெளியாகியுள்ளது.
'தெறி', 'மெர்சல்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - அட்லி கூட்டணியில் வெளியாகவுள்ள திரைப்படம் 'பிகில்'. பெண்களின் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தில் விஜய் பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் இந்துஜா, யோகி பாபு, கதிர், ஷாக்கி ஷெராஃப், விவேக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
-
#Verrekkiddam single from #Whistle https://t.co/nbV4v5iqHj #BigilTelugu @Ags_production @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara @SonyMusicSouth
— Archana Kalpathi (@archanakalpathi) October 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Verrekkiddam single from #Whistle https://t.co/nbV4v5iqHj #BigilTelugu @Ags_production @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara @SonyMusicSouth
— Archana Kalpathi (@archanakalpathi) October 15, 2019#Verrekkiddam single from #Whistle https://t.co/nbV4v5iqHj #BigilTelugu @Ags_production @actorvijay @Atlee_dir @arrahman #Nayanthara @SonyMusicSouth
— Archana Kalpathi (@archanakalpathi) October 15, 2019
பெரும் பொருட்செலவில் ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இவ்வருட தீபாவளிக்கு 'பிகில்' வெளியாகவுள்ளது. தெலுங்கில் இப்படம் 'விசில்' என்ற பெயருடன் வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லரை கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
இப்படத்தில் விஜய் தனது குரலில் பாடிய வெறித்தனம் பாடல் இதுவரை 30+மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதனையடுத்து இப்பாட்டின் தெலுங்கு பதிப்பு வெளியாகியுள்ளது. ரேகுண்டு மெளலி எழுதிய 'வெறிக்கிடம்' பாடலை ரேவந்த் என்பவர் பாடியுள்ளார். இப்பாடல் வெளியான சில மணிநேரத்திலேயே தெலுங்கிலும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
இதையும் வாசிங்க: #விஜய்யின் வெறித்தனம் - மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள்