பிக்பாஸ் ஐந்தாவது சீசனின் தலைவியாகத் தாமரைச் செல்வி தேர்வுசெய்யப்பட்டவுடன், நம்ம பிக்பாஸுடைய சேட்டை ஆரம்பமானது. நேற்று (அக். 12) பிக்பாஸ் நிகழ்ச்சி, 'ஒரு சின்ன தாமரை' பாடலுடன் தொடங்கியது. பாடல் ஒலித்தவுடன் போட்டியாளர்கள் அனைவரும் ஆளுக்கு ஒவ்வொரு திசையில் நடனமாடினர்.
ராஜுவிடம், 'நீ போர்வையை மடிக்காம வந்துட்டே... நான்தான் மடிச்சு வச்சேன்' என்று தலைவர் தாமரை மிரட்டினார். 'அதுதான் மடிச்சு வச்சுட்டல்ல, அப்புறம் எதுக்கு கேட்குற?' என ராஜு எகத்தாளமான பதிலைக் கூறினார்.
கண்ணைத் திறந்துகொண்டு பிரியங்கா சாமர்த்தியமாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அதை பிக்பாஸ் வீட்டில் உள்ள நாய் சரியாகக் கண்டுபிடித்துக் காட்டிக்கொடுத்தது. உடனே தலைவி தாமரை பிரியங்காவை மிரட்டினார்.
கதை சொல்லும் அக்ஷரா
கதை சொல்லட்டுமா டாஸ்க் தொடங்கியது. அக்ஷரா மேடைக்குச்சென்று, தான் அப்பாவின் செல்ல மகளாக வாழ்ந்துவந்ததாகவும் அவர் உயிரிழந்தவுடன் அம்மா, அண்ணா வளர்ப்பில் இருப்பதாகவும் கூறினார்.
மேலும் வெளிநாட்டில் நடந்த அழகிப் போட்டியில், வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருப்பதாகத் தெரிவித்தார். அதுவரை அமைதியாக இருந்த கும்பல் அவரின் திறமைக்கு மரியாதை கொடுக்கும் வகையில் கைத்தட்டியது.
இவரது கதையைக் கேட்ட பலரும் லைக் கொடுக்க, பிரியங்கா குழு நபர்களான நிரூப், அபிஷேக் மட்டும் டிஸ்லைக் கொடுத்தனர். அடுத்ததாக நம்ம டிஸ்லைக் மன்னர் ராஜு - இவருக்கு என்ன கொடுப்பார் எனத் தெரிந்துகொள்ள அனைவரும் ஆர்வமாகக் காத்திருந்தனர்.
ராஜுவின் எதிர்பாராத செயல்
எப்போதும் டிஸ்லைக் கொடுக்கும் ராஜு இவரது கதையைக் கேட்டுவிட்டு, லைக் கொடுத்தார். அவரின் பேச்சில் உண்மை இருக்கிறது எனக் கூறி லைக் கொடுத்தார். என்னது நம்ம ராஜு லைக் கொடுத்தாரா என அனைவருமே ஒரு நிமிடம் ஷாக்காகிவிட்டனர். டிஸ்லைக்கைப் பார்த்தால் அக்ஷரா கண்களில் கண்ணீர் வந்துவிடும் என்பதற்காக அவர் இதைக் கொடுத்திருப்பார்போல.
மேலும் அவர் எப்போதும், Comfort zone-யில் இருக்கிறார். அதிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக அவருக்கு இந்த டிஸ்லைக் கொடுத்ததாகப் பிரியங்கா தெரிவித்தார்.
அப்பா மரணத்தில் கற்றுக்கொண்ட பாடம்
அடுத்த நபராகப் பிரியங்கா கதை சொல்லும் டாஸ்கிற்கு வருகிறார். "11 வயதில் என் அப்பாவை நான் இழந்துவிட்டேன். ரயிலில் போய்க்கொண்டிருந்தபோது உடல்நலக்குறைவு காரணமாக, இறந்துவிட்டார். ரயிலில் பயணித்த யாராவது ஒருவர் உதவியிருந்தால் அவர் இருந்திருப்பார். அதனால்தான் நான் யார் உதவி என்று கேட்டாலும் உடனே செய்துவிடுவேன். அவர் மரணத்திலிருந்து இதுதான் கற்றுக்கொண்டேன்" என்றார்.
அக்ஷராவைப் போலவே இவருக்கும் பலரும் லைக்கும், டிஸ்லைக்கும் கொடுத்தனர். உடனே அனைவருக்கும் நன்றி. டிஸ்லைக் கிடைத்தது பெரிய வலியைக் கொடுக்கவில்லை என்ற போலி சிரிப்போடு பிரியங்கா நகர்ந்தார்.
அங்கீகாரம் கிடைக்கவில்லை
அடுத்த நபராகக் கதை சொல்லவந்தவர் சிபி. பெற்றோரின் செல்லப் பிள்ளையாக வளர்ந்த இவர், லண்டனில் வேலையை விட்டுவிட்டு சினிமாவில் நடிக்கும் ஆசையோடு சென்னை வந்தார். தனது நண்பர்களின் உதவியோடு, வஞ்சகர் உலகம் படத்தில் நடித்து, மாஸ்டர் படத்தில் கிடைத்த வாய்ப்பை நினைவுகூருகிறார்.
இருப்பினும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால், பிக்பாஸுக்கு வந்ததாகத் தெரிவித்தார். வழக்கம்போல் டிஸ்லைக் மன்னர் ராஜு, டிஸ்லைக் பட்டனைக் கொடுத்தார். தனது குரு வழியில் செல்கிறேன் எனக் கூறி அபிஷேக்கும், சிபி கதைக்கு டிஸ்லைக் கொடுத்தார்.
தலைவரானதுடன் தாமரைச் செல்வியிடம் பழக வேண்டும் என்ற காரணத்திற்காக அக்ஷரா அவருடன் அமர்ந்து பேசுவதோடு நிகழ்ச்சி முடிந்தது. இது ஒருபுமிருக்க இந்தி பிக்பாஸ் சீசன் 15 நிகழ்ச்சி, அக்டோபர் 2ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதனை சல்மான் கான் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில், அண்மையில் வெளியான புரோமோவில், டிவி நடிகரான ஈஷான் ஷெகல், நடிகையும் மாடலுமான மீஷா ஐயர் இருவரும் பிக் பாஸ் வீட்டில் ஆங்காங்கே கட்டிப்பிடித்து லிப் லாக் முத்தம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: BB DAY 8: எதிர்பாராத கேப்டன்... நாமினேஷனில் நடந்த புதிய திருப்பம்