பிக்பாஸ் 12ஆவது நாள் கமல் ஹாசனின், 'சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே' பாடலுடன் தொடங்கியது. சனிக்கிழமை ஒரு அழகான பெண் wild card entry-யாக வந்தால் நன்றாக இருக்கும் என்பது நிரூப்பின் ஆசை.
இதனால் பிரியங்கா, 'உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும்' எனக் கேட்க, அவர், 'கண்ணுக்கு லட்சணமா இருக்கணும். நாலு பேர் பார்த்துப் பொறாமைப்படணும்' எனப் பட்டியலிட்டார்.
நகைச்சுவை கதை சொன்ன ராஜு
இன்னுமா சார் இந்தக் கதை சொல்லட்டுமா டாஸ்க் முடியல. நேற்று (அக். 15) முதல் நபராக வந்த ராஜு தன்னுடைய கதையை நகைச்சுவையாகத்தான் சொல்லப்போகிறேன் என ஆரம்பித்தார். இருவேறு மதங்களைச் சேர்ந்த தன் அப்பா, அம்மாவின் குடும்பங்களைச் சேர்க்க வேண்டும் என்பதே ஆசை.
"இரண்டு குடும்பமும் ஒருமுறை படம் பார்க்கச் சென்றிருந்தோம். பேசாமல் இருந்தவர்களைப் படம்தான் சேர்த்துவைத்தது. அதனால் சினிமா மீது ஆர்வம் வந்தது. பாக்கியராஜிடம் பணிக்குக் கற்றுக்கொண்டேன். இயக்குநர் நெல்சன் எனது குரு. கனா காணும் காலங்களில் வாய்ப்பு கிடைத்ததால், இங்கே இருக்கிறேன். இதுதான் எனது சின்ன கதை" என மிகவும் நகைச்சுவையுடன் தெரிவித்தார்.
கொளுத்திப் போட்ட பிக்பாஸ்
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒருவாரத்தில் போட்டியாளர்களிடையே சண்டை வந்துவிடும். ஆனால் இந்தமுறை சற்று குறைவாகத்தான் இருக்கிறது. அதனால் பிக்பாஸ் வழக்கம்போல் கொளுத்திப்போடும் வேலையைத் தொடங்கிவிட்டார்.
போட்டியாளர்களிடம் யார் குறைவாக இந்த வீட்டில் தங்களது பங்கைக் கொடுக்கின்றனர் என்பதை இரண்டு அணிகளாகப் பிரிந்துசொல்ல வேண்டும் எனக் கட்டளையிட்டார். சிறந்த பங்களிப்பு கொடுத்த ஒருவர், கொடுக்காத இருவரைத் தேர்வுசெய்வதில் போட்டியாளர்கள் மும்முரமாக ஈடுபடுகின்றனர்.
பூஜை பொருள்கள்
விஜயதசமி நாளை முன்னிட்டு வீட்டை அலங்காரம் செய்ய பிக்பாஸ் பொருள் அனைத்தையும் அனுப்பிவிட்டார். அதில் குழந்தை குணம் பிரியங்கா, இனிப்பை லபக் என்று வாயைத் திறந்து திருட்டுத்தனமாக விழுங்கிவிடுகிறார். அத்துடன் நாடகத்திற்கான பொருள்களும் அனுப்பப்பட்டன.
மேக்கப் போட்டவுடன் அனைவரும் கார்டன் ஏரியாவிற்கு வந்து நாடகத்திற்குத் தயாராகிவிட்டனர். சிவனாக நிரூப்பும், பார்வதியாக இசையும், பூசாரியாக இமானும் வேடமிட்டனர்.
ஆரம்பமே வா பாஸ்...
இசையின் பாடலோடு நாடகம் தொடங்கியது. கோமாளியாக ராஜு தனது பங்கை வெளிக்காட்ட, பிரியங்கா நாடகத்தைத் தொகுத்து வழங்கினார். இப்படி ஒருபக்கம் நாடகம் நடக்க, இன்னொரு பக்கம் சின்னபொண்ணு தனி நாடகம் நடத்தினார்.
இறை வணக்கம் பாடலை நான் பாட வேண்டும் எனச் சொல்லிவிட்டு, இசையைப் பாட வைத்ததற்கான காரணத்தைக் கேட்டார். உடனே அனைவரும் நாடகத்தை நிறுத்திவிட்டு அவரைச் சமாதானம் செய்தனர்.
சரி வாங்க மக்களே நம்ம நாடகத்திற்குள்ள போகலாம்...
பூமியில் கெடுதல் செய்யும் மக்களை, அம்மன் வதம் செய்வதுதான் இந்த நாடகத்தின் மையம். அம்மனாகத் தாமரை மிரட்டிய காட்சி பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. அவர் மட்டுமின்றி ராணியாகப் பாவனியும், நாடியா சாங்க், ஐக்கி, ராஜு என அனைவரும் தங்களது பங்கை சரியாக வெளிக்காட்டினர்.
இப்படி நாடகம் ஒருபக்கம் நன்றாக நடந்தாலும், போட்டியாளர்களிடையே எலிமினேஷன் குறித்த பயமும் அதிகரித்து காணப்பட்டது.
இதையும் படிங்க: BB DAY 11: ’யாஷிகாவால்தான் இந்த நிலைமையில் இருக்கிறேன்’ - உருகும் நிரூப்