பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் லாஸ்லியா. இவர் ‘பிரெண்ட்ஷிப்’ படத்தில் ஹர்பஜன் சிங், அர்ஜுன் ஆகியோருடன் நடிக்கிறார். இதேபோன்று நடிகர் ஆதியுடன் பெயர் வைக்கப்படாத படத்திலும் நடித்து வரும் லாஸ்லியா, தற்போது மூன்றாவதாக ஒரு புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
அறிமுக இயக்குநர் ராஜா சரவணன் இயக்கும் படத்தில் லாஸ்லியா நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக பூரனேஷ் நடிக்க உள்ளார். இன்னும் இந்த படத்திற்கு பெயர் வைக்கப்படவில்லை. அதிரடி திரில்லர் கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.